புனிதம், தேடுவது,

Prayer at dawn

ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்; தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்.

2 திமொத்தேயு  2-21

நாம் பாவத்திற்கு  இட்டு செல்லும் எல்லாவற்றிலும் இருந்து விலகி செல்ல வேண்டும். தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரது பெயரை அறிக்கையிட்டு,  நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாட வேண்டும்;  அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும், வீண் சண்டையிடாதவராயும்   இருக்க வேண்டும். 

ஆண்டவர் நம்மை எந்த நிலைமையில் வைத்திருந்தாலும் நாம் அவருக்கு ஏற்றபடி வாழ வேண்டும். 

 கிறிஸ்தவர்களுக்கு கொடுமை செய்து வந்த சவுல் மதிப்பற்றைவைகளிருந்து தம்மை விடுவித்து கொண்டு ஆண்டவரிடம் திரும்பி பவுலாக மாறினார். தூய வாழ்வு வாழ்ந்தார். ஆண்டவரால் அதிகமாக பயன்படுத்தப்பட்டார். 

முரடனான மோயிசன் மதிப்பற்ற  எல்லாவற்றையும் விடுத்து கடவுள் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார். இஸ்ரேல் மக்களை வழிநடத்தும் அளவுக்கு ஆண்டவர் அவரை விலையேரப்பெற்றவராக மாற்றினார்.

அதிக ஞானமில்லாத மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்த பேதுரு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஆண்டவரை பின் தொடர்ந்தார். ஆண்டவரை நேசித்தார்.   மறுதலித்த போது மனங்கசந்து அழுதார். ஆண்டவர் அவரை திருச்சபையின் தலைவர் ஆக்கினார்.

நாம் மதிப்பற்ற உலக நாட்டங்களில் விடுபட்டு ஆண்டவர்க்கு உரியவைகளை தேடும் போது தூயவராக மாறுவோம். அவர் பயன்படுத்தும் கருவி ஆவோம் . 

ஜெபம் : ஆண்டவரே எங்களை பயன்படுத்தும். பகையுள்ள இடத்தில் சமாதானம் செய்யவும், அன்பிற்காய் ஏங்குவோருக்கு அன்பை கொடுக்கவும்,  பசித்தோருக்கு உணவிடவும், நோயுற்றோருக்கு உதவி செய்யவும், ஆதரவற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும்,  சிறந்த அன்பின் கருவியாக எங்களை பயன்படுத்தும் . அதன் மூலம் உம் கண்களில் இரக்கம் பெற அருள் புரியும். ஆமென்.

Add new comment

5 + 4 =

Please wait while the page is loading