செய்வது சரியா?

Prayer at dawn

இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

மத்தேயு 5 .45

 

நமக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூற வேண்டும்.  பகைவரையும் நேசிக்க வேண்டும். நம்மை  துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் ஜெபிக்க வேண்டும் என்று ஆண்டவர் சொல்கிறார். 

 

நாம் நம்மை அன்பு செய்வோரை அன்பு செய்தால் அதற்கான கைம்மாறு பெற்று விடுவோம்..  எனவே கைம்மாறு எதிர்பாராது பகைவரையும் அன்பு செய்ய வேண்டும் . 

 

நாம் ஒவ்வொருவரும் இறைவன் தங்கும் ஆலயம். ஆலயத்தை தூய்மையாக வைத்து கொள்வது நம் கடமையாகும். ஆண்டவர் நல்லவர் தீயவர் என்று பார்ப்பதில்லை. மழை எல்லோருக்கும் பெய்கிறது. சூரியனும் வேறுபாடின்றி உதிக்கிறது.  

எனவேநாமும் அப்படியே இருக்க வேண்டும்.

 

 நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போலநாமும் நிறைவுள்ளவர்களாய்  இருக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.

 

ஜெபம். ஆண்டவரே நீர் இரக்கம் உள்ளவராக இருப்பது போல உம் பிள்ளைகள் நாங்களும் இருக்க விரும்புகிறோம்.  உம்மை போன்று எல்லோரையும் அன்பு செய்து வாழ விரும்புகிறோம். எங்கள் வாழ்வில் பலன் எதிர்பார்க்காமல் பிறரை அன்பு செய்து வாழ எங்களுக்கு அருள் செய்யும். நல்ல மனதை தாரும்.  ஆமென்

Add new comment

2 + 0 =

Please wait while the page is loading