எது என் சொத்து

Prayer at dawn

ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.

 

திருப்பாடல்கள்.  119:57

 

ஆண்டவர்தாமே நம்உரிமைச் சொத்து; அவரே நம் கிண்ணம்; நமக்குரிய  பங்கைக் காப்பவரும் அவரே;

 

 

இஸ்ரயேல் நிலத்தை  சொத்துக்களை 11 கோத்திரங்களுக்கும் பிரித்து விட்டார்கள். அப்போது லேவியருக்கு மட்டும் எந்த பங்கும் இல்லை. அந்த சமயத்தில் ஆண்டவர் ஆரோனிடம் கூறுகிறார் "அவர்கள் நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை, அவர்களிடையே உனக்குப் பங்கும் இல்லை; இஸ்ரயேல் மக்களிடையே உனக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் நானே." என்று.

 

ஆண்டவரை மட்டுமே தம் உரிமை சொத்தாக கொண்டு வாழ்பவர்களுக்கு ஆண்டவர் அருளுவன. 

 

 நமக்கு இருக்கும் அனைத்தும் வளமாகும்..

 

அறிவுரை வழங்கும் ஆண்டவர் வலப்பக்கம் இருப்பார் எனவே, நாம் அசைவுருவதில்லை. 

 

நம் இதயம் எப்பொழுதும் அக்களிக்கும் .உள்ளம் மகிழ்ந்து துள்ளும். நம் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

 

அவரையே நம் பங்காக நாம் கொண்டிருந்தால் நம்மை பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டார். ; நம்மை படுகுழியைக் காண விடமாட்டார்.

 

வாழ்வின் வழியை நாம் அறியச் செய்வார்.  அவரது முன்னிலையில்  நிறைவான மகிழ்ச்சி உண்டு; நமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

 

ஜெபம் : ஆண்டவரே உலக சொத்து இன்பம் எல்லாம் சில காலம் தான், நீரே நிலையானவர். எங்கள் பங்கும் உரிமை சொத்தும் நீரே என்பதை உணர்ந்து வாழ ஆவியின் வழிகள் நடத்தும் ஆமென்.

Add new comment

4 + 4 =

Please wait while the page is loading