உள்ளத்தில் இது இடுப்பதால், வாய் இதைச் சொல்லும்

Prayer at dawn

கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார்

 

யோவான்  4-24

 

 நம்  கடவுள் உண்மையுள்ளவர். அவரைத்வழிபடுபவர்கள் ஆவியோடும் உண்மையோடும் வழிபட வேண்டுமென்று ஆண்டவர்  எதிர்பார்க்கிறார். அப்போது  அவருடைய இருதயம் மகிழுகிறது.

 

 

இயேசு  என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.

 

காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார்.

 

 

 ஆண்டவர் நம்மை தம் பிள்ளைகளாக அழைத்து இருக்கிறார். . அந்த நோக்கம் என்ன? எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.' என்பதாகும்.

 

 

நாம் உண்மையோடு ஆண்டவரை ஆராதிப்பதில் அவர் மிகவும் விருப்பமாக இருக்கிறார்.. அவர் அதை ஆவலோடு எதிர்பார்க்கிறார்.

 

இஸ்ரேல் மக்களை  பார்வோனிடமிருந்து விடுவித்த போது அவர்  இரண்டு காரியங்களை அவர்களிடத்திலே எதிர்பார்த்தார். முதலாவது, ஆராதனை செய்ய வேண்டும். இரண்டாவது,  பலி செலுத்த வேண்டும்.

 

நம்முடைய 

தனிப்பட்ட ஜெப நேரத்திலானாலும் சரி ஆலயத்திற்குச் சென்று ஜெபிக்கும் போதானாலும் சரி, அவரை ஆவியோடும் உண்மையோடும்  துதித்து, மகிமைப்படுத்தி வழிபட வேண்டும். அப்படி நாம் செய்தால் விண்ணக  சந்தோஷத்தை இப்பூமியில் அனுபவிப்போம்.

 

 திருப்பாடல்களில் தாவீது ராஜா  ஆவியோடும் உண்மையோடும் துதித்திருப்பதை பார்க்கலாம்.நாமும் துதிப்போம். ஆண்டவர் பெரிய காரியங்களை செய்வார். வெற்றிகளை அள்ளி அள்ளி தருவார். உலகம் தராத சமாதானத்தை ஆண்டவர் இன்றே தருவார்.

 

ஜெபம் : ஆண்டவரே உம்மை போற்றுகிறோம். துதிகளின் நடுவில் இருப்பவரே உம்மை போற்றுகிறோம். உன்னதமானவரே உம்மை போற்றுகிறோம். தூயவரே உம்மை போற்றுகிறோம். துணையாளரே போற்றுகிறோம். எங்களுக்குள் வாசம் செய்பவரே உம்மை துதிக்கிறோம்.  ஆமென்

Add new comment

1 + 1 =

Please wait while the page is loading