உரிமையுடன் அப்பா

Prayer at dawn

தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்; “பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே.”

 

எபிரேயர் 12.5

 

தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.”

 

தாவீது ராஜா தவறு செய்த போது கடவுள் அவரை தண்டித்தார்.  அதை அவரும் ஏற்றுகொண்டார்.  பின்னாளில் அவருடைய எல்லா வெற்றிகளிலும் ஆண்டவர் அவரோடு இருந்தார்.

 

நாம் திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். கடவுள் நம்மை தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?

 

உரிமை இருப்பதால் மட்டுமே நாம் தண்டிக்கப் படுகிறோம். நாம் தவறு செய்வதால்  நிலை வாழ்வின் மகிழ்வை இழந்து விடக் கூடாது என்று நம்மை தண்டிக்கிறார். 

 

இவ்வுலகத் தந்தையர் நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள். நாமும் அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து வந்தோம்.  ஆனால் கடவுள், நமது நலனுக்காக, நாமும் அவருடைய தூய்மையில் பங்குகொள்ள வேண்டுமென்பதற்காகவே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார்.

 

இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சியை தராது.  துயரத்துக்குரியதாகவே தோன்றும். பின்னர்,  அமைதியையும் கொடுக்கும். 

 

ஜெபம் : ஆண்டவரே அமைதியை அருளுகின்ற கடவுளே உம்மை துதிக்கிறோம்.  நீர் எங்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் நாங்கள் மீண்டும் அதே பாவத்தில் விழாது மீட்கப்பட்டு நிலை வாழ்வின் மகிழ்வை அனுபவிக்க கொடுக்கும் வாய்ப்புகள் என்பதை உணர ஞானத்தை தாரும்.  நீர் எங்கள் தந்தை என உணர்ந்து உம் அன்பை முழுமையாக அனுபவிக்க அருள் தாரும் . ஆமென்.

Add new comment

1 + 0 =

Please wait while the page is loading