இது எச்சூழலிலும் வெற்றிதரும்

Prayer at dawn

என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும்.

வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.

திருப்பாடல்கள் 25-20,21

அன்பு சகோதர சகோதரிகளே, தாங்க முடியாத கஷ்டத்திலும் , வியாதிப்படுக்கையின் நேரத்திலும், போராட்டத்தின் மேல் போராட்டம் வந்து, அவற்றால் அமிழ்ந்து போகக்கூடிய சூழ்நிலை வந்தாலும் கவலைப்படாதீர்கள். ஆண்டவர் நம்மை காப்பார்.

ஆண்டவருடைய வார்த்தைகளை உறுதியாய் பிடித்து கொள்வோம். ஆண்டவர்கிட்ட நம்பிக்கையோடு சொல்லுவோம் . ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை; அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்கள்.  அவர் நம்மை கண்மணிபோல காப்பார். நம் வழிகளெல்லாம் காப்பார்.  

ஆயன் தன் மந்தையை காப்பது போல அவர் நம்மை காப்பார் . நிறைவான பூரண சமாதானத்துடன் நம்மை காப்பார் . சோதனைக்காலத்திலும் காப்பார் .எல்லா தீமையினின்றும் நம்மை காப்பார் .

 வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர். அலகை நம் உள்ளத்தில் பயத்தையும், அவநம்பிக்கையும், சோர்வையும் கொண்டு வரும்போது எல்லாம்,   இயேசுவே என்னோடு இரும் என்று அவருடைய உயர்ந்த நாமத்தை சொல்லுவோம்.    அவருடைய செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவோம்.

 ஆண்டவர் நம்  வலது பக்கத்திலே நமக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் நம்மை  சேதப்படுத்தாது. நம்மையும் நம் ஆத்துமாவையும் எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார்.

ஜெபம்:. ஆண்டவரே, துன்ப நேரத்தில் உம்மைநோக்கி கூப்பிடும்போது எங்கள் பக்கமாக தலை சாய்த்து எங்கள் குரலை கேட்பவரே, உமக்கு நன்றி. எங்களுக்கு உமது ஆலய முத்தங்களில் அமைதியை தாரும்.  உமது பெயரின் மாட்சியையும், வலிமையையும் உணர்ந்தவர்களாக எப்பொழுதும் உம் துதியை சொல்லும் மனதை எங்களுக்கு தாரும் . ஆமென்.

Add new comment

7 + 13 =

Please wait while the page is loading