அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

Prayer at dawn

இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.

 

யோவான்     2:5

 

நாம் மரின்னையிடம் வேண்டுதல்களை சமர்பித்து விட்டு நமக்கு எல்லாம் கிடைத்து விடும் என்று விட்டு விடுகிறோம். மாதா நமக்காக பரிந்து பேசுவாங்க உண்மைதான். ஆனால் மாதா என்ன சொல்றாங்க. அவர் உங்களுக்கு சொல்வதை செய்யுங்கள் என்கிறார்கள்.

அந்த கல்யாண வீட்டில் மாதா இயேசுவிடம் பேசிய பிறகு அங்கிருந்தவங்க   இயேசு சொன்னபடி ஆறு கல்ஜாடி நிறைய தண்ணீர்  நிறைத்தாங்க . இயேசு  சொன்னபடியே அந்த தண்ணீரை பந்தியில்  பறுமாரினாங்க .அந்த தண்ணீர் சுவை மிகுந்த திராட்சை ரசமாக மாறியிருந்தது.

நாமும் இயேசுவின் குரலுக்கு கீழ் பணிந்து அவர் சொல்கிறபடி நடந்தால் மட்டுமே  நாம் கேட்பதை பெற்றுக்கொள்வோம்.  நாம் நம் வழிகளில் நடந்து கொண்டு இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்தால், நாம் எத்தனை நவநாள் செய்தாலும் , எத்தனை ஜெபமாலை சொன்னாலும், எவ்வளவு தூரம் கால் நடையாக சென்று அன்னையை தர்சித்தாலும்   ,நிச்சயமாக நம்முடைய   ஜெபம் கேட்கப் படாது .

மரியன்னையிடம் வேண்டுவோம். இயேசுவின் குரலுக்கு செவிமடுத்து  ஆண்டவரின் அனைத்து ஆசீர்வாதங்களை யும் நிறைவாக பெற்றுக் கொள்வோம்.

 

ஜெபம் :. யேசுவே , நாங்கள் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தவும், உமது வார்த்தைக்கு கீழ்படியவும் விரும்புகிறோம்.. ஆண்டவரே உமது அசீர்வதங்களால் எங்களை நிரப்பும். கரம் பிடித்து  வழி நடத்தும்.. ஆமென்.

Add new comment

4 + 5 =

Please wait while the page is loading