அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

prayer at dawn. pray with nature

ஆவலோடு என் ஆண்டவருக்காய் காத்திருந்தேன்
அவர் என்னருகில் வந்து அன்போடு அமர்ந்தார்.

அப்பா வானத்திற்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன் என்றேன்.
அவரோ நீதிமான்களையன்று  பாவிகளையே நான் தேடி வந்தேன் என்றார். 

இருள் சூழ்ந்துள்ளதே. என்னோடு வந்து தங்கும் ஆண்டவரே என்றேன்.
அவரோ நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதும் இல்லையே மகளே என்றார்.

ஆண்டவரே என் தோற்றத்தைக் பார்த்து யாரும் என்னை விரும்புவது இல்லையே என்றேன்.
அவரோ மனிதர் முகத்தைப் பார்க்கிறார்கள். நானோ உன் இருதயத்தை பார்க்கிறேன் என்றார்.

ஆண்டவரே நான் ஒன்றுக்கும்  பயனில்லாதவள்.
ஆண்டவரே நான் நோயோடு கஷ்டப்படுகிறேன். என் எலும்புகளில் பலமில்லை என்றேன்.  அவரோ மகளே உன் பலவீனத்தில் என் பலம் பூரணமாக விளங்கும் என்றார்.

என் உறவுகள் என்னை வெறுக்கிறார்கள்.  அனாதை போல் இருக்கிறேன் என்றேன். தாய் மறந்தாலும் கூட நான் உன்னை மறக்க மாட்டேன் . என் பார்வையில் நீ விலைமதிப்பு  பெற்றவள் பெற்றவன்  என்றார்.

என் மீது இவ்வளவு அன்பு வைத்துள்ள நீங்க என்னோடு இருக்க வேண்டும் என்றேன்.  அவரோ உலகம் முடியும் வரை உன்னோடு கூட இருப்பேன் என்றார்.

நன்றி ஆண்டவரே.  நீர் என் மீது மாறாத அன்பு வைத்திருப்பதற்கு நன்றி  

நான் எப்படி இருந்தாலும், என் இன்பத்திலும் துன்பத்திலும் என்னுடனிருந்து தாயாக தந்தையாக இனிய உறவாக என்னை நேசிக்கின்ற என் அன்பு தந்தையே உமக்கு நன்றி. 

 இந்நாள் முழுவதும் என் சார்ந்த எல்லாரையும் எல்லாவற்றையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். உம் கரங்களில் ஒப்பு கொடுக்கிறேன்  

Add new comment

9 + 3 =

Please wait while the page is loading