நமது திறமைகள் பிறருக்கு பயன்பட: திருத்தந்தை பிரான்சிஸ் 

Catholic Telegraph

நம்முடைய திறமைகளை, பிறருக்கென பயன்படுத்த, நாம் அழைப்புப் பெற்றுள்ளோம் என்ற கருத்தை மையமாக வைத்து, ஜூலை 29, இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம்மிடமுள்ள திறமைகளையும், திறன்களையும் கண்டுபிடித்து, மற்றவர்களின் சேவைக்கென அவற்றைப் பயன்படுத்துவது குறித்த அழைப்பையும், சவாலையும், நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தந்துள்ளார்' என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாகியுள்ளன.

'இறைத்தந்தையுடன் கொள்ளும் நேரடித் தொடர்பில் நம்மை நிலைநிறுத்தி, செப அனுபவத்தைப் பெறவேண்டுமென இன்றைய நற்செய்தி வாசகத்தில் நமக்கு அழைப்பு விடுக்கிறார் இயேசு. இதுவே கிறிஸ்தவ செபத்தின் விந்தை. ஒருவர் ஒருவரிடையே அன்பு கொண்ட மக்களிடையே இடம்பெறும் உரையாடல், மற்றும், நம்பிக்கையின் அடிப்படையில் எழும் உரையாடல், செபம்' என, திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

9 + 10 =

Please wait while the page is loading