லண்டனில் அதிர்ச்சி தந்த தீர்ப்பு

Top reasons why people don't commute by bicycle – Goodordering Goodordering

இலண்டனில் தனது அலைபேசியையேப் பார்த்தப்படியே இறங்கி வந்தார். அங்கே சைக்கிளில் வந்துகொண்டிருந்தவர் அவர்மீது மோதினார். கெம்மா ப்ரூசெட் என்ற அந்த இளம்பெண் அவள்மீது மோதிய ரிச்சர்ட் கெசல்டின் என்பவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வரம் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்த வழக்கின் தீர்ப்பு எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கெம்மா என்ற அந்த இளம்பெண்ணுக்கு ரிச்சர்ட்டு இழப்பீடாக 4,161.79 புவுண்டு வழங்கவேண்டும் என்றும், அதைவிட சுமார் 100,000 பவுண்டுகள் நீதிமன்றச் செலவாக வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பைக் கேட்ட ரிச்சர்டு அதிர்ந்தார். அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துபோனது என தலையில் கையை வைத்து அமர்ந்துவிட, எதிர்பாராத உதவி கிடைத்தது. வழக்குக் குறித்து அறிந்த பொதுமக்களுக்கு ரிச்சர்டு மீது இரக்கம் ஏற்பட, சிலர் அவருக்கு உதவுவதற்காக நன்கொடை வசூலித்துள்ளனர். இதுவரை 47000 பவுண்டுகள் அவருக்கு வந்துள்ளனர். மக்களின் இந்த உதவியை கண்டு மெய்சிலிர்த்துப்போனார் ரிச்சர்டு. தான் நீதிமன்றத்திற்கு செலுத்தியதுபோக மீதமுள்ள தொகையை தொண்டு நிறுவனத்திற்குக் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தனக்கு உதவிசெய்த மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அலைபேசியைப் பார்த்துக்கொண்டே சாலையில் இறங்கிய கெம்மா மீதும் தவறு உள்ளது என்றாலும் சைக்கிள் ஓட்டுபவர்கள்  எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று கூறி, சரியான சிக்னல் பார்த்து, காரன் அடித்தபடி சைக்கிள் ஓட்டவேண்டும் என்று சொல்லி இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டது. இது ஒரு தவறான வழிகாட்டுதலாக அமைய வாய்ப்புண்டு என்று மக்கள் ஐயம் தெரிவித்துள்ளார்கள்.
 

Add new comment

3 + 1 =

Please wait while the page is loading