மன்னியுங்கள் தீவிரவாதி என்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டேன்...

An image of investigating a terrorist. image from NPR.

பிரான்சை சேர்ந்த பெண் பயங்கரவாதி ஒருவருக்கு ஈராக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 பிரான்சை சேர்ந்த ஜமீலா என்ற பெண் ராப் பாடகர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின் அவர் தூர்க்கி வந்த போதுதான் அவர் திருமணம் செய்த நபர் ஒரு பயங்கரவாதி என்று தெரியவந்துள்ளது.

 இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஈராக்கில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் இறந்தள்ளுநர். இன்நிலையில்தான் அவருக்கு ஈராக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஜமீலா பிரான்சில் இருக்கும் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில், தான் ஒரு சூழ்நிலைக் கைதி எனவும், நான் எனது கணவரை திருமணம் செய்யும் பொழுது அவர் ஒரு சொல்லிசை பாடகராக இருந்தார்.

 அதன்பின் நாங்கள் தூர்க்கி வந்த பின்னரே அவரைப் பற்றிய தகவல் தெரிய வந்தது.  நான் ஒரு நிரபராதி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 அதுமட்டுமின்றி தான்  பிரான்சு சிறையில் இருக்க தயார் எனவும்,  பிரான்சுக்கு மீட்டு செல்லுங்கள் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

 மேலும் பிரான்ஸ் அரசாங்கம் எனக்கு ஒரு முறை மட்டும் கரிசனை காட்டுங்கள் நான் பிரான்சில் இயல்பு வாழ்க்கை வாழ விரும்புகிறேன் என கூறியிருக்கிறார். 
 

Add new comment

3 + 0 =

Please wait while the page is loading