பிரான்சில் வாழும் அகதிகளின் பரிதாப நிலை ஐக்கிய நாடுகள் கண்டனம்

An image of people staying under roads

பிரான்சில் அகதிகளும், புலம்பெயர்வாழ் மக்களும் பரிதாபத்துக்குரிய நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை. உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் அரசை  வலியுறுத்தியுள்ளது. 

 பிரான்சில் சுமார் 16,000 பேர் அதிகாரபூர்வமற்ற குடியிருப்புகளில் மிக மோசமான நிலையில் கூடாரங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

 அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரேட்டர் பாரிஸ் பகுதியில் இருப்பதும் அங்கும் தங்குமிடம் இன்றி  தெருக்களில் வாழ்வோரின்  எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கலாயிஸ் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

மேலும் ஒரு பகுதியில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 200 பேர் தெருக்களில் தங்கியுள்ளார்கள்.

 பரபரப்பான பாரிசின் ரிங் ரோட்டின் கீழ் சாலையில் ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பயணிக்கும் நிலையிலும் தொடர்ந்து பலர் முகாமிட்டிருக்கிறார்.

 சாலைகளில் மோசமான நிலையில் புலம்பெயர் தங்குவதை குறித்து பேசியிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் தூதரான லெய்லானி ப்ராஹ.

 குறிப்பாக 600 முதல் 700 பேர் வரை வட பிரான்சில் கடற்கரையில் முகாம்களில் அவசர உதவி முகாம்களை அணுகக்   கூட இயலாத நிலையில் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 பிரான்ஸ் அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூடாரங்களிலும் அதிகாரபூர்வமற்ற குடியிருப்புகளிலும் தங்குவோரை  வெளியேற்றும் மனிதாபிமானமற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 தான் சென்றிருந்த ஒரு கட்டத்தில் சுமார் 300 பேர் குழந்தைகள் உட்பட மிகுந்த நெரிசலில், பூச்சிகள் காணப்பட நிரம்பி வழியும் கழிப்பறைகளுடன்  வாழ்வதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் தூதரான இவர். 
 

Add new comment

11 + 6 =

Please wait while the page is loading