பறக்கும் விமானத்திலிருந்து விழுந்த கென்யப் பயணி

Financial Times

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஹித்ரோ விமான நிலையத்தில் பறக்கும் விமானத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கென்யா நாட்டின் நைரோபி நகரத்திலிருந்து லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திற்கு பயணித்த கென்யா ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலிருந்து தெற்கு லண்டனின் கிளாபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். 

விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அந்த நபர் அங்குதான் ஒளிந்துகொண்டு நடுவானில் விமானத்திலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கீழே விழுந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க உதவிகள் செய்யவேண்டும் என்று லண்டன் அதிகாரிகள் கென்யாவின் உயர்அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே வேளையில் இந்த சம்பம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் லண்டன் அதிகாரிகள்.
 

Add new comment

9 + 6 =

Please wait while the page is loading