நாற்பது ஆண்டுகளுக்குபின் தாய் மகன் எலும்புக்கூடு மீட்பு

https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2019/06/ranee006/img/625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

ஆஸ்திரேவியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக 4 வயது குழந்தையுடன் காணாமல்போன தாய் 100 அடி ஆழமான குவாரியில் எலும்புகளாக மீட்கப்பட்டுள்ளார். ரெனீ மக்ரே என்கின்ற 36 வயது நிரம்பிய ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த பெண் தனது நான்கு வயது மகன் ஆண்ட்ரூவுடன் நவம்பர் 12இ 1976 அன்று பெர்த்தில் இருந்த தனது காதலனைச் சந்திக்க வீட்டைவிட்;டு வெளியேறினார்.

சில மணிநேரங்களுக்குப் பின்னர் அவருடைய பி.எம்.டபிள்யூ கார் இன்வெர்னஸீக்கு தெற்கே ஏறக்குறைய 11 மைல் தொலைவில் உள்ள டால்மகரியில்  முற்றிலும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் இரத்தக்கறை படிந்திருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அவர்கள் இருவரும் கொலைசெய்யப்பட்டதான் இறந்திருக்கின்றார்கள் என்பதைக் காவல்துறையினர் உறுதிபட கூறினர். ஆனால் அவர்களின் உடல்களை அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த வழக்கு பலமுறை நீதிமன்றத்திற்கு வந்து மறுபரிசீலனைச் செய்யப்பட்டு, கைவிடப்பட்டது.

கடந்த அக்டோபர் 2018 இல் ஸ்காட்லாந்தில் இருந்து துப்பறியும் நபர்கள் மீண்டும் தேடுதலைத் தொடங்கினர். அவர்கள் புதிய தடயங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.  கடந்த மாதம் குலோடன் பகுதியிலிருந்து நான் மைல் தொலைவில் உள்ள லீனாச் குவாரி படுகையில் இருந்து 13 மில்லியன் லிட்டருக்கு அதிகமான நீரை வெளியேற்றி சோதனையை மேற்கொண்டனர். அதில் விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புக்கூடுகள் இருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். 

மேலும் அதில் குழந்தைகளை வைத்து அழைத்துச்செல்லும் கைவண்டியும் கைப்பற்றப்பட்டது. அதில் ஒரு சில பொருட்கள் ரெனீயுடன் ஒத்துப்போவதால் துப்பறியும் குழுவிற்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள். ரெனீ மக்ரே மற்றும் அவருடைய மகனுடையதுதானா என்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Add new comment

5 + 7 =

Please wait while the page is loading