நவீன அடிமைதனத்தை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது – திருத்தந்தை

மனித கடத்தல் மற்றும் நவீன கால அடிமை தனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது அத்தகைய குற்றங்கள் நிரந்தமாகி விட வழி செய்யும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

நாம் கண்டு கொள்ளாமல் விட்டாலும், பிற காலங்களை விட அடிமைத்தனம் பெரிய அளவில் வேறுப்பட்டதாக இல்லை என்று பிப்ரவரி மாத செப கருத்தை விளக்கிய காணொளியில் திருத்த்நதை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

இன்று அதிக அடிமைதனங்கள் உள்ளன என்கிற உண்மையை நாம் புறந்தள்ளி விட முயடியாது என்று வெள்ளிக்கிழமை பதிவிடப்பட்ட இந்த ஒரு நிமிட காணொளியில் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

 

சோகமான எதார்த்தத்தை எதிர்கொண்டு. இந்த குற்றம் மனித குலத்திற்கு எதிராக அமைந்துவிட்டதில் தங்களுக்கு பொறுப்பில்லை இல்லை என்று யாரும் கூறி விட முடியாது.

 

மனித கடத்தலுக்கு ஆளானோர், விபச்சாரம் மற்றும் வன்முறையை எதிர்கொண்டோரை வரவேற்பதன் மூலம் செபிக்கவும், செயல்பாடுகளை முன்னெடுக்கவும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

Add new comment

7 + 7 =

Please wait while the page is loading