தெற்கு சூடான் நாட்டு கிளர்ச்சி தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட பாப்பரசர்

Pope Francis kissing feet of south Sudan warring leaders. Image from Catholic Herald

தெற்கு சூடான் நாட்டு கிளர்ச்சி தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட பாப்பரசர்

போப் பிரான்சிஸ் அவர்கள், இரண்டு நாள் தியானத்திற்கு வந்து பங்கேற்ற தெற்கு சூடான் நாட்டு முன்னாள் போரிட்டுக் கொண்டிருந்த தலைவர்களின் கால்களை முத்தமிட்டார்.

82 வயதான, எல்லா கத்தோலிக்கர்களின் தலைவர், வத்திக்கான் அரசர், இந்த மாபெரும் மனம் தொடும் நிகழ்வை, கால்களை முத்தமிட்டு பின்பு அவளிடம்

"அமைதியில் இருக்க ஒரு சகோதரனாக கேட்கிறேன்.
எனது இதயத்தில் இருந்து கேட்கிறேன். நாம் முன்னோக்கி செல்வோம்" என்றார்.

ஜனாதிபதி செல்வா கியருக்கும் அவரது போட்டியாளரான முன்னாள் கிளர்ச்சித் தலைவர்
ரைய்க் மச்சாருக்கும் 2013 ல் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்து 4 லட்சம் மக்கள் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.

கடந்த ஆண்டு அவர்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதால் யுத்தம் முடிவுக்கு வந்தது.

இவர்களிடத்தில் திருத்தந்தை மண்டியிட்டு பாதங்களை முத்தி செய்து அமைதிக்காக வேண்டினார்.

Add new comment

11 + 8 =

Please wait while the page is loading