சென்னையை சேர்ந்த பெண் முதல் அமெரிக்க சபாநாயகரானார்

Pramila Jayapal Makes History As First Indian-American Woman. PC: TheHill

அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பேற்றார்.

அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இடைக்கால தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பேற்றார்.

ஜனநாயக கட்சி எம்.பி.யான பிரமிளா ஜெயபால் தான் பாராளுமன்ற கீழவை தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் தெற்கு ஆசிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னையில் பிறந்தவர். சிங்கப்பூரிலும், இந்தோனேசியாவிலும் வளர்ந்தார். 1982-ல் அமெரிக்காவுக்கு குடியேறினார். அமெரிக்காவில் படிப்பை முடித்த இவர் அமெரிக்க கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் ஆவார். இடைக்கால தலைவராக இருக்கையில் அமர்ந்து பணியாற்றிய படங்களை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். அதில்,

அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தலைவராக இன்று(நேற்று) பொறுப்பேற்றுள்ளேன். இந்த பதவியை ஏற்கும் முதல் தெற்கு ஆசிய பெண்ணாக பெருமைப்படுகிறேன். பல்வேறு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறி உள்ளார். பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக கடந்த ஜனவரி முதல் நான்சி பெலோசி என்பவர் இருந்து வந்தார். பாராளுமன்றத்தின் பெரும்பான்மையாக உள்ள கட்சி பிரதிநிதிகள் அடிப்படையில் அவ்வப்போது சபாநாயகர் இடைக்காலமாக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. (Thinaboomi)

Add new comment

1 + 3 =

Please wait while the page is loading