கொஞ்சம் காப்பி! நிறைய சர்ச்சை!

An image of a coffee cup. (AZCentral.com)

காப்பி என்பது மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய பொருள் அல்ல  என்ற சுவிஸ்சஸ்ர்லாந்தின்  கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

உயிர் வாழ அத்தியாவசிய பொருள்களை சேகரித்து வைப்பது உலகப்போர் சமயத்தில் இருந்தே சுவிட்சர்லாந்ததின் வழக்கமாக உள்ளது.

அதன்படி மூன்று மாதங்களுக்குப் போதுமான அளவு காபி கொட்டைகள் சேமித்து வைக்கப்படுவது உண்டு.

இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தற்பொழுது சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. காப்பி என்பது மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய பொருள் அல்ல என்பதால் காபி கொட்டைகளை சேகரித்து வைக்க வேண்டியதில்லை என அரசு முடிவு செய்துள்ளது.

பொதுவாக காப்பி, சர்க்கரை, அரிசி, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் சேமித்து வைக்கப் படுவது உண்டு.

 ஆனால் புதனன்று அவசரகால பொருட்களை மீளாய்வு செய்வதில் காப்பி என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருள் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காபியில் கலோரிகள் குறைவாக உள்ளன, தேவையான சத்துகளையும் அது கொடுப்பதில்லை என்று சுவிஸ் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவு நவம்பர் மாதம் எடுக்கப்பட உள்ளது.

சுவிஸ்சஸ்ர்லாந்தின் காப்பி குறித்த கருத்திற்கு சமூக ஊடகத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் நமது சுவிஸ் நாட்டவர்  எடுத்துள்ளது  முட்டாள்தனமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

 ஜெர்மனியை சேர்ந்தவர் தான் பார்க்க விரும்பிய முக்கிய நாடுகள் பட்டியலில் இருந்து சுவிஸ்ர்லாந்தை  நீக்கி விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

 லண்டனை சேர்ந்த ஒருவர், ஒரு தந்தையாக தான் செய்யும் வேலைகளில் ஏற்படும் களைப்பை நீக்குவதால் காப்பி அத்தியவசியமானது தான் என்கிறார்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Add new comment

4 + 11 =

Please wait while the page is loading