என்னது ப்ளூ கார்டா? அப்படி என்றால் !?!

An image of holding a blue card

அமெரிக்காவில் வாழ்வோர் பணிபுரிவதற்கான முழு உரிமைகளை வழங்கும் கிரீன் கார்டு பார்த்துதான் ஜெர்மனியும் இந்த ப்ளூ கார்டு என்னும் திட்டத்தை கொண்டு வந்தது.

ஆனால் கிரீன் கார்டு போல் இல்லாமல், ப்ளூ கார்டு வைத்திருப்போர் தாங்கள் தங்கள் நாட்டில் வாங்கும் சராசரி சம்பளத்தை விட ஒன்றரை மடங்கு அதிக சம்பளம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.

முறையான பல்கலைக்கழக பட்டம் பெற்று நல்ல சம்பளம் பெறுபவர்களுக்கு புளூ கார்டு வழங்கப்படும்.

எனவே நீங்கள் ப்ளூ கார்ட் பெற விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் கையில் வேலைக்கான உத்தரவு ஒன்று தயாராக இருப்பது அவசியம்.

நீங்கள் ப்ளூ கார்டு வைத்திருப்பவரானால்  33 மாதங்களுக்கு பின் நிரந்தர வாழிட உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 உங்களிடம் B1 மொழி சான்றிதழ் இருந்தால் இந்த காலகட்டம் 21 மாதங்களாக குறைக்கப்படும். மற்ற நாடுகளில் நீங்கள் வாழ்ந்த காலகட்டமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மற்ற ஐரோப்பிய ஒன்றியத்தால் அல்லாத வாழ்வு உரிமம் வைத்திருப்போர் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி இருக்கும்.

 இது ஜெர்மனியில் வேலை செய்வதற்காக மட்டுமல்ல ஜெர்மனியில் வேலை செய்யத் தொடங்கி 18 மாதங்கள் ஆகிவிட்டது என்றால் ப்ளூ  கார்டு வைத்திருப்பவர்கள் எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கும் செல்லலாம்.

டென்மார்க் அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு மட்டும் நீங்கள் செல்ல முடியாது.

ப்ளூ கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமேஅன்று,  அவர்களது துணைவர் மற்றும் குழந்தைகளும் ஜெர்மனியில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
 

Add new comment

4 + 2 =

Please wait while the page is loading