ஆயர் ஜோசப் அந்தோனி இருதயராஜ் அவர்களுக்கு அஞ்சலி

ஆயர் ஜோசப் அந்தோனி இருதயராஜ் அவர்களுக்கு அஞ்சலி

முன்னாள் தர்மபுரி ஆயர் மேதகு ஜோசப் அந்தோனி இருதயராஜ் அவர்கள் 29 நவம்பர் 2019 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அவருடைய அடக்கச் சடங்கானது தர்மபுரி மறைமவாட்டத்தில் அருள்பணி நிலையத்தில் உள்ள புதிய பேராலயத்திடலில் திருப்பலியுடன் 30 நவம்பர் 2019 சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. 

ஆயர் இருதயராஜ் அவர்கள் சலேசிய சபையைச் சார்ந்தவர். இவர்தான் தர்மபுரி மறைமாவட்டத்தின் முதல் ஆயர். தனது அருள்பணிக் காலத்தில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு, மறைமாவட்டத்தின் வளர்ச்சியில் தன்னையே முழுமையாகக் கொடுத்தவர். 

ஆயர் இருதயராஜ் அவர்கள் 4 அக்டோபர் 1935 இல் பிறந்தார். 20 ஏப்ரல் 1965 இல் சலேசிய சபைக்காகக் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 24 ஏப்ரல் 1997 இல் தனது 61-வது வயதில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 13 ஜனவரி 2012 இல் பணி ஓய்வுபெற்றார். ஆக, 54 ஆண்டுகள் குருவாகவும், 22 ஆண்டுகள் ஆயராகவும் திருஅவைக்குப் பணிசெய்து, இறைவனை முகமுகமாய் சந்திக்கச் சென்றுள்ளார்.

அவருடைய ஆன்மாவுக்காகத் தொடர்ந்து செபிப்போம்...
 

Add new comment

6 + 12 =

Please wait while the page is loading