அன்னையை நோக்கி திருத்தந்தையின் ட்விட்டர் செய்திகள்

Pope Francis praying with Mother Mary

அன்னையை நோக்கி திருத்தந்தையின் ட்விட்டர் செய்திகள் 

14 மே, 2019.

மே 13, இத்திங்களன்று, பாத்திமா நகர் அன்னை மரியா திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்த அன்னையை நோக்கி செபிக்கும் தொனியில், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'பாத்திமாவின் அன்னை மரியாவே, நாங்கள் ஒவ்வொருவரும் உம் கண்களில் விலையேறப் பெற்றவர்கள், மற்றும், எங்கள் இதயங்களில் இருக்கும் எதுவும் உம்மை மனம் நோகச் செய்யாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உம் அரவணைப்போடு எம் வாழ்வைப் பாதுகாத்து, புனிதத்துவத்தின் பாதையில் எம்மை வழி நடத்தியருளும்'  என எழுதியுள்ளார்.

மேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் டுவிட்டரில், 'இறைவனையும் நம் சகோதர சகோதரிகளையும், இவ்வுலகம் முழுமையையும் அன்புகூரவும், இந்த அன்பில் உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளவும், உதவும் தன் திட்டத்தை, இறைவன் நம்மிலும் தன் படைப்பு முழுவதிலும் வைத்துள்ளார்' என எழுதியுள்ளார்.

தன் இரண்டாவது டுவிட்டரில், ‘நம் துவக்க காலத்திலிருந்தே இறைவன் நமக்கென வடித்துள்ள அன்பின் திட்டத்தை கண்டுகொள்ளவும், அதை துணிச்சலுடன் ஏற்று நடைபோடவும் உதவவேண்டும் என, இறையழைத்தலுக்காக செபிக்கும் இந்த உலக நாளன்று, செபத்தில் ஒன்றிப்போம்' என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  (வத்திக்கான் செய்தி)

Add new comment

5 + 9 =

Please wait while the page is loading