புனித பிரான்சிஸ் சவேரியார்

நற்செய்தி அறிவிப்பு பணியின் சாட்சிகள்
அக்டோபர் 2
புனித பிரான்சிஸ் சவேரியார்: இந்தியா மற்றும் ஜப்பானின் திருத்தூதர்

யார் இவர்...

ஸ்பெயின் நாட்டில் நவரா என்னுமிடத்தில் சவேரியார் கோட்டையில் திரு. யுவான் தெ யாசு திருமதி. டோனா மரியா என்னும் தம்பதியருக்கு 1506 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் நாள் பிறந்தார். 

தனது ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்தார். தன்னுடைய அன்னையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தமது கோட்டையில் இருந்த சிற்றாலயத்தில் ஒவ்வொரு நாளும் செபிப்பார். அவர் அன்னை

மரியாவிடமும் புனித மிக்கேல் அதிதூதரிடமும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். பல விளையாட்டுகளிலும் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார். 

புனித இஞ்ஞாசியாரைச் சந்தித்து நட்புடன் பழகினார். புனித இஞ்ஞாசியார் இவருக்கு உதவிகள் பல புரிந்தார். புனித இஞ்ஞாசியார் புனித சவேரியாரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த இறைவார்த்தையை மேற்கோள்காட்டுவார்: மத்தேயு நற்செய்தி 16:26 - “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?” இந்த இறைவார்த்தை அவரை புடமிட ஆரம்பித்தது.

1537 ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 24 ஆம் நாள் குருவாகத் திருநிலைத்தப்பட்டார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தியானம் செய்வதையும் திருப்பலி நிறைவேற்றுவதையும் நோயின்போதுகூட கைவிடவில்லை.  

1552 டிசம்பர் 3 ஆம் தேதி இறந்தார். திருத்தந்தை 15ஆம் கிரகோரி இவரை 1622 மார்ச் 12 ஆம் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 

அவருக்கு அப்படியென்ன சிறப்பு?

இந்திய மண்ணிற்கு வந்து அனைவரையும் இறைஅன்பால் பற்றியெறியச் செய்ய 12 மாதங்களும் 27 நாட்களும் கடல் பயணம் மேற்கொண்டு 1542 ஆம் ஆண்டு மே 6  ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். 

மலாக்கா அம்போயினா தீவுகளுக்கு சென்று நற்செய்தி அறிவித்தார். தனது பத்தாண்டு பயணத்தில் 50க்கும்  மேற்பட்ட நாடுகளில் நம்பிக்கை தீபத்தை ஏற்றினார். பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இறைவனின் பாதம் கொண்டுவந்தார். 

1541-1552 இந்த ஆண்டுகள் இடைவெளியில் ஏறக்குறைய 65000 கிமீ தொலைவு பயணம் செய்திருக்கிறார் என்பது அவருடைய வேகத்தையும், நற்செய்தியின்பால் கொண்ட தாகத்தையும் சுட்டிக்காட்டுகிறது. 

ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். என்னை வெட்கமடையவிடாதேயும். உம் நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும். இறைவனின் கன்னித்தாயே என்னை உமது பாதத்தில் அர்ப்பணிக்கிறேன். என்னை இறைவனின் முடிவில்லா வாழ்விற்குக் கொண்டு சேர்த்தருளும். உம் அடியானாகிய என்னை நினைவுகூர்ந்தருளும் எனச் செபித்து தன் உயிரை இறைவனிடம் ஒப்படைத்தார்.

தனது கடிதங்களில் தன்னுடைய துன்பங்களையும் ஜப்பான் நாட்டிற்கு இறைபணி ஆற்றவருபவர்களின் துன்பங்களையும் குறிபிட்டிருந்தார். இவற்றை அடிப்படையில் தாங்கிகொள்வதற்கான சக்தி அவர்களின் பிறன்பு (CHARITY) எனக் கூறுகிறார். நற்செய்திக்காக தன்னை அர்ப்பணித்த மபெரும் புனிதர் இவர்.

நாம் என்ன செய்ய முடியும்: 

பிறரன்புப் பணிகளில் ஈடுபடவேண்டும். அது அவர்களை இயேசுவின்பால் கொண்டுவந்து சேர்க்கும். அத்தகைய பணியினை செய்வதற்கு நாம் இறையன்பை அனுபவிக்க வேண்டும். அது நம்மை உந்தித்தள்ளவேண்டும்.
 

Add new comment

4 + 10 =

Please wait while the page is loading