திருமுழுக்கு பெற்றோரும் அனுப்பப்பட்டோரும் | Lyric Video

 

திருமுழுக்கு பெற்றோரும் அனுப்பப்பட்டோரும் 

திருமுழுக்கு பெற்றோரும் அனுப்பப்பட்டோரும் (2)
உடைந்த அனைத்தையும் சரிசெய்ய அழைக்கப்பட்டோரும்
இறைவனின் மகிழ்ச்சியை உலகெங்கும் விதைக்க அனுப்பப்பட்டோரும்
வெறுப்பு நிறைந்த உள்ளத்தில்ஞ எதிர்நோக்கை வித்திடுவோம்
இந்த உலகினை நாங்கள் நேசிக்கிறோம்
என்பதை வாழ்ந்து காட்டிடுவோம்.

இறைவனின் சோலையில் இறைவனின் தோழராய்
அன்பை விதைத்திடுவோம்
விதைகள் புலர்ந்து செடியாய் உயர்ந்திட
அன்பை பாய்ச்சிடுவோம்
நலிந்தவர் உயர்ந்தவர் இயேசுவில் நிலைத்திட
இறைஅறுவடையில்  இணைவோம்
காலம் மாறினாலும் அவர் வார்த்தை மாறாதே
இயேசுவின் திருநாமத்தில் என்றும் வாழ்வோம்

நம் வாழ்வே நற்செய்தி அறிவிப்பாகும்
மனமாற்றம் அதன் கருவியாகும்
நம் செயல்கள் மெய் மறைசாட்சியாகும்
உலகத்தின் செவிகளில் ஒலிக்கும்
நம் உழைப்பால் வீழ்ந்தோரை உயர்ந்திடுவோம்
இறைநம்பிக்கை சக்தியால் வென்றிடுவோம்
உலகமும் இதை பார்த்து அறிந்துகொள்ளும்
அநீதியை நம்பிக்கை வென்றொழிக்கும்
 

 

 

 

 

 

 

 

 

 

Download here

Add new comment

3 + 4 =

Please wait while the page is loading