சிகரம், ஒரு மூங்கில் மரம் 6: மூளையை நெறிப்படுத்தும் 3D முறை

சிகரம், ஒரு மூங்கில் மரம் 6: மூளையை நெறிப்படுத்தும் 3D முறை

நம்முடைய மூளை இருக்கே அது ஒரு ரப்பர் மாதிரி, அது அப்படியே விட்டுவிட்டால் சிறியதாக சுருங்கியேதான் இருக்கும். ஆனால் அதை நாம் சரியான முறையில் நெறிப்படுத்தி, நம்முடைய கற்றலால் அதை நிரப்பினால், அது பெரியதாகிக் கொண்டேயிருக்கும்.

அதனை நெறிப்படுத்துவது எப்படி?

வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணையித்து, அதனடிப்படையில் நாம் செயல்பட்டுக்;கொண்டே இருந்தால் மூளையின் பயன்பாட்டை விரிவாக்கலாம், வெற்றிபெறலாம். இதற்கு 3னு முறையைப் பின்பற்றச் சொல்வார்கள்.

அதாவது, 
முடிவுசெய்தல் (Decision), 
நெறிப்படுத்துதல் (Discipline), 
நிலைத்துநிற்றல் (Determination). 

ஆக, நம்முடைய இலக்கை நோக்கியப் பயணத்தில், எது நமது இலக்கு என்ற சரியான முடிவுசெய்யவேண்டும், அதனை நோக்கியப் பயணத்தில் எடுத்த முடிவுக்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தவேண்டும். அதாவது தேவையானவற்றைக் கற்றுக்கொள்வதும், தேவையற்றதை நீக்குவதும் இதில் அடங்கும். 

கடைசியாக, முடிவுசெய்யப்பட்டு அதற்காக வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த பயணத்தில் எவ்வளவு தடைவந்தாலும், எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டதோ என்ற பயம் வரும்போதும், நம்மால் இலக்கை அடையமுடியும் என்ற உறுதியான நம்பிக்கையில் நிலைத்து நிற்கவேண்டும். 

அப்பொழுது நம்முடைய மூளையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் மூளையைப் போன்று வேலைசெய்ய ஆரம்பிக்கும்.
 

Add new comment

5 + 1 =

Please wait while the page is loading