ஓ என் ஆண்டவரே! Morning Prayer

A Morning Prayer - PC: The Diocese of Ardagh And Clonmacnois

ஓ என் ஆண்டவரே!

இந்த நாளுக்காக உமக்கு நன்றி.

இன்று எதுவும் என்னை உம்மிடமிருந்து பிரிக்காதிருக்கட்டும்.

உம் வழியை மட்டும் தேர்ந்தெடுக்க எனக்கு கற்பியும்.

உம்மை இன்னும் அதிகமாக நெருங்கி வர வழி நடத்தும்.

என் உணர்ச்சிகள் அல்ல, உம் வார்த்தையின் படி நடக்க உதவி புரியும்.

என் இதயத்தை பிளவுபடாது தூயதாய் இருக்க உதவி புரியும். என் வார்த்தைகளோ, எண்ணங்களோ, ஆசைகளோ உம்மிடமிருந்து என்னை அகற்றி விடாது காத்தருளும்.

இன்று என் பாதையில் வரும் எல்லாவற்றையும் வாய்ப்பாக பார்க்க என்னை தூண்டும்.

இந்த நாள் முடியும் வேளையில் எனக்கு மன அமைதியும் உண்மையில் நடந்த நிம்மதியும் திகழ்வதாக.

ஆமென்!

Add new comment

5 + 12 =

Please wait while the page is loading