அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

Morning prayer with nature

அன்பருடன் 
அதிகாலைத்துளிகள் 
ஆனந்தமாய் நான் அமர்ந்தேன்
அவரும் என்னை உற்று நோக்கினார்.

மனம் நோகச் செய்ததற்கு 
மன்னிப்பு கேட்டேன்
மகளே மறந்துவிட்டேன்
மறுபடியும் செய்யாதே என்றார்.

நன்மை பல  நினைத்து
நன்றி பல சொன்னேன்
நான் நன்றி சொல்ல சொல்ல,
நன்மைகளால்  இன்னும்
 நிரம்புவாய் என்றார்.

இருள் நடுவே வாழ்கின்றேன் என்றேன்
இருளும் உன்னை கவ்வாது
இரவும் உன்னை தீண்டாது
இரு தோள்களில்
உன்னை சுமந்துள்ளேன் என்றரர்.

சொத்தை இழந்தேன்
சுகத்தை இழந்தேன்
சொல்லி அழ யாருமில்லை என்றேன்
சொந்தம் என நான் இருக்கிறேன் என்றார்.

கண்ணீரோடு என் வாழ்வு கழிகிறது என்றேன்
நீ கலங்காதே மகளே
காலமெல்லாம் உன்னிடமிருந்து உன்
கண்ணை  கண்ணீருக்கு விலக்குவேன் என்றார்

ஆயிரம் மணித்துளிகள் 
அகிலத்தில் வாழ்வதை விட
ஆண்டவர் இயேசுவோடு  இருக்கும் 
அதிகாலை துளிகளே ஆனந்தமானது.
 

Add new comment

6 + 5 =

Please wait while the page is loading