அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

An image of mother teaching to pray

அதிகாலை துளிகளில்  ஆண்டவருக்காக  ஆவலாய்  காத்திருந்தேன்.  அவரும் என் பக்கமாக திரும்பி என்னைப்  பார்த்தார்.

அன்பு ஆண்டவரே நாங்கள் படுத்தாலும் நடந்தாலும் எங்களை உம் கண்கள் கண்டு கொண்டு இருப்பதற்காக உமக்கு நன்றி.

ஒவ்வொரு காலையும் எங்களை எழுப்பி  எங்களுக்கு  கற்றவரின் நாவன்மையை தருவதற்காக உமக்கு நன்றி.

அன்புக்கு தந்தையாய் தியாகத்திற்கு தாயாய் நல்ல நண்பனாய் எல்லாத்துக்கும் எல்லாமாக  இருக்கின்ற எங்கள் அன்பரே உமக்கு கோடான கோடி நன்றி.

இந்த நாளை நன்மைகளால்  நிரப்பும் ஆண்டவரே.  

எங்களோடு வந்து தங்கும் ஆண்டவரே.  உம்முடைய ஒளி எம்மீது வீசப்பண்ணும் ஆண்டவரே.

நாங்கள் பாவம் செய்தோம்  ஆண்டவரே. உம் திருமுன் நிற்கும் தகுதியை இழந்து விட்டோம். எங்களை மன்னியும் இயேசுவே. 

 நல்ல மழையை தாரும் ஆண்டவரே.  பூமியின் மீது பனி பெய்து விதைகளை முளைப்பிக்க செய்தவரே உமது  பிள்ளைகளாகிய எங்கள் நிலையை பார்த்து எங்களுக்கு நல்ல மழை தாரும்.  

எங்கள் மனங்களையும் பூமியையும் குளிர்வித்தருளும்.  பூமியின்ஆழங்களிலுள்ள ஊற்றுக்கள் நிரம்ப செய்தருளும் 

எங்கள் குடும்பங்களின் பெரியோர் இளையோர்  சிறியோர் அனைவரையும்  உடல் உள்ள சுகத்தை கொடுத்து காத்தருளும் ஆண்டவரே . நன்றி ஆண்டவரே . நன்றி.
 

Add new comment

2 + 3 =

Please wait while the page is loading