அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

A Man praying under the Cross. PC : Pio John

எமது வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிற இறைவா!

 இந்த இனிய காலைப் பொழுதில், உம்மை நினைத்து பார்க்கும் இந்த பாக்கியத்திற்காக நன்றி செலுத்துகிறோம்.

 எமக்குள் உம் சுவாசக் காற்றை ஊதி, எமது வாழ்க்கைக்காக  நல்ல பல திட்டங்களைக் கொண்டு, எம்மை  ஆற்றல், அறிவு மற்றும் திறமைகளால் நிரப்பி உமது மாபெரும் படைப்பாகக் கருதி,   இவ்வுலகில் வாழ, நீர் கிருபை பாராட்டியதற்காய் உம்மை போற்றுகிறோம்.    
      
இவ்வுலக வாழ்க்கையில் நீர் எமது வழியாக இருந்து,  செவ்வையான, உன்னதமான, ஆக்கப்பூர்வமான வழிகளில்,  எம்மை இந்நாள்வரை வழிநடத்தி வந்தமைக்காக நன்றி கூறுகிறோம்.

 உமது கண்களில் விலையேறப்பெற்ற பிள்ளைகளாய், எங்களை படைத்ததற்காக, உமது அளவு கடந்த அன்பால் எம்மை அன்பு செய்து, ஒவ்வொரு நாளும் எமக்கென நீர் வகுத்த   திட்டத்தின்படி வாழ அருள் புரிவதற்காக, எமது நன்றி பலியை உமக்கு ஏறெடுக்கிறோம்.

 உமது கரம் எம்மை, சத்தியத்தின் பாதையில், தினமும் நடத்தி  வருவதை நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

 இந்நாளையும், இந்நாளில் நாங்கள் 
எடுக்கும் முயற்சிகளையும், செய்யும் காரியங்களையும், எமது திட்டங்களையும், எண்ணங்களையும், எமது நாவிலிருந்து வரும் சொற்களையும் கூட  நீர் ஆசீர்வதியும்.

உமது உடனிருப்பை, அன்பை, பாதுகாப்பை நாங்கள் உணர்ந்து,
உமது சித்தத்திற்கு எங்களை முழுமனதோடு அர்ப்பணித்து,  உமக்கு உகந்தவர்களாக வாழும் வரம் வேண்டி, எம்மை இன்று  உம்மிடம் அர்ப்பணிக்கிறோம்.

 இந்த நாள் பொன்னாளாக அமைவதாக!

Add new comment

6 + 0 =

Please wait while the page is loading