அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

Morning prayer a boost for soul

ஆண்டவரே அதிகாலை வேளையில் என்னை எழுப்பி எனக்கு புது பலன் தந்ததற்காக உமக்கு நன்றி.  

இந்த நாள் முழுதும் என்னுடன் இருந்து என்னை காத்தருளும்.

ஆண்டவரே என் தலையை நறுமண தைலம் பூசி ஆசீர்வதியும் .

வணங்கா கழுத்துள்ள பிள்ளையாக நான் இல்லாமல் உமக்கு பணிந்து வாழ வரமருளும்.

என் கண்களை  கண்ணீருக்கு விலக்கியருளும் ஆண்டவரே.

என் வாயோடு வாயாக நீர் இருந்து பேசும். 

ஆண்டவரே, பொய் நாவை என்னை விட்டு அகற்றும். என் நாவு எப்பொழுதும் உம்மை துதிக்கும் பேரருளை தாரும். 

என் கைகளின் உழைப்பை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

என் இதயம் நீர் தங்கும் ஆலயம் ஆண்டவரே. 
எனவே என் இருதயத்தின் தியானங்கள் உமக்கு ஏற்றனவாக செய்யும். 

என் எலும்புகளை நிணமுள்ளதாக மாற்றும். 
என் கால்கள் இடறி விழாமல் காத்து என்னை கண்மலை மேல் காலூன்ற செய்தருளும் இயேசுவே

என் ஆத்துமாவை பாதாளத்திற்கு செல்ல விடாமல் அழிவை காண விடாமல் காத்தருளும் ஆண்டவரே.

ஆண்டவரே என் குடும்பத்தையும் நண்பர்களையும் உறவினர்களையும் என்னுடன் பணி புரிவோர் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.  

என் ஜெபத்தை கேட்டு பதில் கொடுப்பவரே நன்றி . ஆமென்.

Add new comment

3 + 1 =

Please wait while the page is loading