அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

An Image of a man praying to God. PC & EC : Pio John

எங்கள் அன்புத் தாயும் தந்தையுமான இறைவா! 

கடந்த இரவு முழுவதும் எங்களை கண்ணின் மணி போல பேணிப்பாதுகாத்து,நல்ல உறக்கத்தையும், சுகத்தையும் அருளி இப்புதிய நாளுக்குள்ளாய் நாங்கள் கடந்து வர நீர் கிருபை 
பாராட்டினதற்காய் உம்மை நன்றியோடு நினைக்கிறோம்.

 இன்றைய நாளில், உமது கருணைக் கண்களை, எம்மீது  திருப்பி உம் திருமுக ஒளியை எம்மீது பிரகாசிக்க செய்வீராக.

 உமது கடைக்கண் பார்வை , உமது திருமுக ஒளி, எமது வாழ்வை பாதுகாக்கவும் பிரகாசிக்கவும் செய்வதாக. 

உமது பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து நாங்கள் சரியான பாதையில் செல்லவும், நல்ல முடிவுகளை எடுக்கவும், நல்ல காரியங்களில் ஈடுபடவும் வரம் அருள்வீராக. 

நீர் எங்களை இன்று தாயைப் போல தேற்றி, தந்தை போல ஆற்றி சுமந்து காப்பீராக.

 எங்களையும், எங்களது சொல், செயல், சிந்தனைகள் அனைத்தையும் ,எங்களது செயல் திட்டங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் மற்றும் கனவுகள் அனைத்தையும் சிரம் தாழ்த்தி உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறோம் .

எங்களை முழுவதுமாய்  பொறுப்பெடுத்து வழி நடத்துமாறு உண்மை இறைஞ்சுகின்றோம். 

 இந்த நாள் இனிய நாளாக அமைவதாக! 

Add new comment

3 + 9 =

Please wait while the page is loading