சிகரம் தொடும் ஆசை: பாரதி கண்ணம்மா

சிகரம் தொடும் ஆசை: பாரதி கண்ணம்மா

கொச்சப்படுத்தப்பட்ட அடைமொழிப் பெயர்களால் அழைக்கப்பட்டு, அவமனப்படுத்தப்படும் மூன்றாம்நிலை பால்நிலையினரின் நிலையைமாற்ற அரவாணிகள் என்னும் பெயரைக் கொண்டுவரக் காரணமானார். அவர்களுக்கு விடிவெள்ளியாக வந்து, பின்னர் திருநங்கை என்று அழைக்கபடக் காரணமானவர்களுள் ஒருவர்;. அவர்தான் மதுரை மாநகரில் பிறந்த பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை

13 வயதாக இருந்தபோது, நான் பெண்னைப்போல நடக்கின்றேன் என்று என்னுடைய தந்தை என்னை அடிப்பார். நான் ஒரு ஆணுக்குரிய உடையை அணிந்தாலும், உணர்வால் என் இதயத்தில் ஒரு பெண்ணாகவே இருந்தேன். நான் ஒரு திருநங்கையாக பிறந்திருக்கின்றேன் என்பது வெளிப்பட ஆரம்பித்தபோதே யாராலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலைக்குத்தள்ளப்பட்டேன்.

தடைகளைத் தாண்டி ஆங்கிலப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். ஆனால் அவர் முதன்முதலில் வேலைக்குச் சென்றபோது எழுத்துத்தேர்வில் தகுதிபெற்றாலும், நேர்முகத் தேர்வில் அவருடைய குரலைக் காரணம்காட்டி வேலைக்கு மறுக்கப்பட்டார். விரக்த்தின் உச்சத்தை அடைந்தபோது தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவ்வேளையில் சமூகசேவகி ஒருவரின் வழிகாட்டுதலால் வாழ்வின் புதிய கோணத்தை உணர்ந்தார். 

சாதிக்கப்பிறந்தவர்; என்பதை உணர்ந்த அவர் சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். ஓசூரில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனியார் வங்கியில் (ர்னுகுஊ) சேல்ஸ் மேலாளராக பணிசெய்தார். ஒவ்வொரு நாளும் கடினப்பட்டு உழைத்தார். 1996-இல் மிஸ் குவால்கமாகவும் (ஆளைள ஞரயடஉழஅஅ) தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2004 ஆம் ஆண்டு தனது விடுதலைப்பயணத்தை ஆரம்பித்தார். திருநங்கைகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். கி;ராஸ் (hதைசயள) என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். தனது மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மாற்றத்தையும், ஊழலை ஒழிப்பதற்கும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் கூறுகிறார்: எனக்கு யரையும் கண்டு பயமில்லை, என்னுடைய சமூகசேவையில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். 

திருநங்கைகளுக்கு  அடையாளஅட்டை கொடுக்கப்பட்டிருந்தாலும், அதிலே ஆண் அல்லது பெண் என்பதைக் குறிப்பிடவில்லை. அவர்களுக்கென்று ஒரு அரசியல் சட்டநிலை இல்லை, வங்கிகளில் அவர்கள் கடனுதவி பெறமுடியாது மற்றும் அவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகின்றது. எனவே இவ்வுரிமைகளை சரியாகப் பெற இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றார். திருநங்கைகi அரசு அங்கிகரிக்கவேண்டும் என்பதற்காக போராட ஆரம்பித்தார்.

இதற்கு உறுதுணையாக 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மூன்றாம்பாலினத்தை அங்கிகரித்துத் தீர்ப்பு வழங்கியது. 53 வயது நிரம்பிய பாரதிகண்ணம்மா பாராளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்து, தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கையானார். அவர் 1226 வாக்குகள் பெற்றார். போட்டியிட்ட 31 போட்டியாளர்களில், இவர் 15 ஆம் இடத்தைப் பெற்றார். தங்களுக்கென்று குடும்பம் இல்லாததால் தங்களால் முழுமையான அரசியல் வாழ்வை மக்களுக்குக் கொடுக்கமுடியும் என உறுதியளிக்கிறார். இவ்வாறு பல்வேறு நிலையில் அவமானங்களோடும் அங்கிகாரங்களை இழந்தும் வாழும் திருநங்கையர்களின் வாழ்வில் இவர் ஒரு விடிவெள்ளியானார்.  

ஏறக்குறைய 1500 மேற்பட்ட திருநங்கையர்களுக்கு திறமை வளர்ப்புப்பயிற்சி மற்றும் பொதுஇடத்தில் அனுகுமுறைப் பற்றிய  பயிற்சிக் கொடுத்திருக்கின்றார். பாரதிகண்ணம்மா அறக்கட்டளை என்ற பெயரில் பலருக்கும் வாழ்வளித்துக்கொண்டிருக்கின்றார். 

திருநங்கையருக்காக அரசிடம் இவர் போராடிப்பெற முயற்சிப்பது: 1. இலவசக்கல்வி, 2. வீட்டுவசதி, 3. திறன்வளர்ப்புப் பயிற்சி மற்றும் 4. வேலைவாய்ப்பு. 

எனக்குள் எழுந்தது: 

1.   உடல் அமைப்பிலே அசாதாரண மாற்றங்களோடு படைக்கப்பட்டு, சென்;றஇடமெல்லாம் அவமானப்படுத்தப்படும் இந்த திருநங்கை, வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார். 
நல்ல அழகாக படைக்கப்பட்டாலும், தங்கள் உடல் அழகைப் பற்றி யோசித்து, யோசித்து மனவருத்தம் அடைந்து வாழ்வை இழந்துகொண்டிருக்கின்றோம் நாம். இவரால் முடிந்தது என்றால் ஏன் நம்மால்?
2.    எல்லாரும் எதிர்த்தாலும், எந்த சூழ்நிலையும் சாதகமாக அமையவிட்டாலும், தொடர்ந்து முயற்சிசெய்து, கடினப்பட்டு உழைத்து ஒரு சமூக மாற்றத்தையே உருவாக்குகிறார். ஒரு இனத்தின் வழிகாட்டியாக இருக்கின்றார்.
எல்லாராலும் அரவணைக்கப்பட்டு. தகுந்த சூழ்நிலைகள் கொடுக்கப்பட்டாலும் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் நம்முடைய வாழ்க்கை ஒரு இனத்தின் தளர்ச்சி. இவரால் முடிந்தது என்றால் ஏன் நம்மால்?

சிகரம் தொலைவில் இல்லை,
வேரித்தாஸ் தமிழ்ப்பணி

 

Add new comment

5 + 1 =

Please wait while the page is loading